அடப்பாவிங்களா..! ரூ.199 கேப் ரைடு… 1 ரூபாய்க்காக ஓட்டுநருடன் நடுத்தெருவில் மல்லுக்கட்டிய பெண்… இணையத்தில் வைரலாகும் பரபரப்பு வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடப்பாவிங்களா..! ரூ.199 கேப் ரைடு… 1 ரூபாய்க்காக ஓட்டுநருடன் நடுத்தெருவில் மல்லுக்கட்டிய பெண்… இணையத்தில் வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

Published

on

டெல்லியில் உள்ள உத்தம் நகர் கிழக்கு மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு பெண் பயணிக்கும் கேப் ஓட்டுநருக்கும் இடையே வெறும் 1 ரூபாய்க்காகப் பெரிய தகராறு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் பயணக் கட்டணம் ₹199 ஆன நிலையில், அவர் ₹200 நோட்டைக் கொடுத்துவிட்டு மீதி 1 ரூபாயைத் திருப்பித் தருமாறு ஓட்டுநரிடம் வற்புறுத்திக் கேட்டுள்ளார்.

ஆனால், ஓட்டுநரிடம் சில்லறை இல்லாததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. “எங்கிருந்தாவது எனக்கு 1 ரூபாயைக் கொண்டு வந்து கொடுங்கள்” என்று அந்தப் பெண் பிடிவாதமாகக் கூற, ஓட்டுநரோ அவரிடமே சில்லறை மாற்றி வருமாறு பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement

https://www.instagram.com/reel/DcKe7srJlj9/?utm_source=ig_web_button_share_sheet

இந்தச் சண்டை எப்படி முடிந்தது என்பது குறித்த விவரங்கள் வீடியோவில் இல்லை. எனினும், தீபக் குமார் (@ncr_cab_vloging) என்ற கணக்கின் மூலம் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, நெட்டிசன்களிடையே பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in