LATEST NEWS
“எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்…” மாப்பிள்ளையைப் பார்த்ததும் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. நடந்தது என்ன..? மாப்பிள்ளை வீட்டாருக்கு ஷாக்…!!
பஞ்சாப் மாநிலம் பிரோஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மணமகனை நேரில் பார்த்த மணப்பெண் “எனக்கு இந்தத் திருமணம் வேண்டாம்” எனக் கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார். ராஜஸ்தானின் சத்தர்கர் பகுதியிலிருந்து மாப்பிள்ளை வீட்டார் ஊர்வலமாக வந்திருந்தனர். எனினும், திருமண சடங்குகளும் ஃபெராக்களும் தொடங்குவதற்கு முன்பாகவே மணப்பெண் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். தமக்குக் காட்டப்பட்ட புகைப்படத்தில் இருந்த நபர் இவர் இல்லை என்றும், வேறு ஒரு நபரின் புகைப்படத்தைக் காட்டி ஏமாற்றிவிட்டு, தற்போது வேறு ஒருவரை மணமகனாக அழைத்து வந்திருப்பதாகவும் மணப்பெண் குற்றம் சாட்டினார்.
மணப்பெண்ணின் இந்தக் குற்றச்சாட்டை மணமகன் வீட்டார் முற்றிலுமாக மறுத்தனர். இந்தத் திருமணம் இரு குடும்பத்தாரின் முழுச் சம்மதத்துடனும், அனைத்து விவரங்களும் தெரிந்தே நிச்சயிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். திருமண ஏற்பாடுகளின் போது இரு குடும்பத்தாரும் தொலைபேசி வாயிலாகத் தொடர்பில் இருந்ததாகவும், தரகர்கள் மற்றும் மணப்பெண்ணின் தாயார் மூலமாக மணமகனின் புகைப்படங்கள் முன்பே பகிரப்பட்டதாகவும் மாப்பிள்ளையின் தாத்தா மகேந்திர சிங் கூறினார். இந்த விவகாரத்தால் இரு தரப்பினரிடையேயும் கடும் குழப்பமும் வாக்குவாதமும் ஏற்பட்டது.
https://www.instagram.com/reel/DcNijI3zFtq/?utm_source=ig_web_button_share_sheet
இதனைத் தொடர்ந்து, மணமகன் வீட்டார் அளித்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இது குறித்து குரு ஹர் சஹாய் பகுதி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேஜேந்தர்பால் சிங் கூறுகையில், இரு தரப்பினரின் வாக்குமூலங்களையும் பெற்று விசாரணை நடத்தியதாகத் தெரிவித்தார். இறுதியாக, காவல்துறையின் முன்னிலையில் இரு குடும்பத்தாரும் பேசி சுமுகமாகப் பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டனர். இதனால் எந்தவித அசம்பாவிதமும் இன்றி, திருமணம் நடைபெறாமலேயே நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.
