CRIME
“பிரார்த்தனைக்கு வந்த 4 சிறுமிகள்.. பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார்..!” நெல்லை நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு..!!
நெல்லை மாவட்டம் மேல இழந்தகுளம் பகுதியில் திருச்சபை பங்குத்தந்தையாகப் பணியாற்றி வந்த ஆபிரகாம் (47) என்பவர், கடந்த 2022ஆம் ஆண்டு அப்பகுதிக்கு வந்த 4 சிறுமிகளை அடைத்து வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகாரின் பேரில் தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தீவிரமாக நடைபெற்று வந்தது.
வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், பங்குத்தந்தை ஆபிரகாமுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி சுரேஷ் குமார் தீர்ப்பளித்தார். இதன்படி, 4 சிறுமிகளுக்கு எதிராகப் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு சிறுமிக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் இந்த அதிரடித் தீர்ப்பு நெல்லை மாவட்டத்தையே அதிர வைத்துள்ளது.
