அடக்கொடுமையே..! தங்கை கணவனுடன் கள்ளக்காதல்… தட்டிக் கேட்ட கணவனுக்கு நேர்ந்த கொடூரம்..! விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கொடுமையே..! தங்கை கணவனுடன் கள்ளக்காதல்… தட்டிக் கேட்ட கணவனுக்கு நேர்ந்த கொடூரம்..! விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ராஜலிங்கம் (33) என்பவருக்கும், கொல்ரூரைச் சேர்ந்த சோனியா என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்து, இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சோனியாவுக்கும், அவரது தங்கை கணவரான சிவக்குமார் (32) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்து கணவர் ராஜலிங்கம் மனைவியைக் கண்டித்ததால் கோபமடைந்த சோனியா, கள்ளக்காதலன் சிவக்குமாருடன் சேர்ந்து ராஜலிங்கத்தைக் கொல்வதற்குத் திட்டம் தீட்டினார்.

அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி சோனியாவும் சிவக்குமாரும் கூலிப்படையை ஏவி ராஜலிங்கத்தை அடித்துக் கொன்றனர். பின்னர் அவரது உடலை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை போல நாடகமாடினர். எனினும் ராஜலிங்கத்தின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போச்சம்பள்ளி போலீசார் நடத்திய விசாரணையில் இது கொலை என்பது உறுதியானது. இதையடுத்து சோனியா, சிவக்குமார் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த அஜித் (26), காளிமுத்து (26) உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

இவ்வழக்கு கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், விசாரணை காலத்தில் ஒருவர் உயிரிழந்தார். வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி ராஜசிம்மவர்மன் நேற்று அளித்த தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட சோனியா உள்ளிட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.75 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் லோகேஷ்குமார் ஆஜராகி வாதாடினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in