CRIME
“என் பேச்சை மீறி உன் புருஷன் கூட போறியா.?” 5 வருட கள்ளக்காதலை கைவிட்ட பெண்… வீட்டிற்குள் புகுந்து தீவைத்த கொடூர காதலன்… 2 குழந்தைகளின் தாய் உடல் கருகி பலி..!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சால்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரின் மனைவி குருவலட்சுமி (35). அதே பகுதியைச் சேர்ந்த, மனைவியைப் பிரிந்து வாழும் சின்ன கெங்குராஜ் (47) என்பவருடன் குருவலட்சுமிக்கு கடந்த 5 ஆண்டுகளாக திருமணத்தை மீறிய நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில், குழந்தைகள் வளர்ந்த காரணத்தால் குருவலட்சுமி தனது கள்ளத்தொடர்பைக் கைவிட்டு, மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து குடும்பமாக வாழத் தொடங்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சின்ன கெங்குராஜ், தன்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு குருவலட்சுமியை வற்புறுத்தி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் உச்சக்கட்டமாக, கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை குருவலட்சுமியின் வீட்டிற்குச் சென்ற சின்ன கெங்குராஜ், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியதுடன், ஆத்திரத்தில் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துள்ளார். இதில் சுமார் 45 சதவீத தீக்காயங்களுடன் குருவலட்சுமி மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த குருவலட்சுமி மரண வாக்குமூலம் அளித்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகச் சின்ன கெங்குராஜை ஏற்கனவே கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியிருந்த ஓட்டப்பிடாரம் போலீசார், குருவலட்சுமியின் மரணத்தைத் தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
