CRIME
ஐயோ இது என்ன கொடுமை..! செல்ஃபி மோகத்தில் தந்தையே செய்த வெறி செயல்.. 11 மாத குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.. கதறி துடிக்கும் தாய்.. திடுக்கிடவைக்கும் பின்னணி ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் பல்தேவ் காவல் நிலையத்திற்குட்பட்ட கான்வ கிராமத்தில், தந்தை ஒருவர் தனது 11 மாத பச்சிளம் குழந்தையுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு யமுனா நதியில் வீசிய கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ரிங்கு என்பவருக்கும் அவரது மனைவி லட்சுமிக்கும் இடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, அக்பரா பாலத்தில் காரை நிறுதிய ரிங்கு குழந்தையுடன் புகைப்படம் எடுப்பது போல் நடித்து நதியில் வீசியுள்ளார். அதைக் தட்டிக்கேட்ட மனைவியையும் நதியில் தள்ளிவிட்ட நிலையில், லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட லட்சுமி கூறுகையில், கடந்த 2024 ஜூன் 14 அன்று தனக்குத் திருமணம் நடந்ததாகவும், பெண் குழந்தை பிறந்ததிலிருந்து கணவர் தம்மைக் கொடுமைப்படுத்தி வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், மகளின் பிறந்தநாளுக்குச் சில நாட்களுக்கு முன்பு இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளதாகக் கண் கலங்கிய அவர் கூறினார். தகவலறிந்த பல்தேவ் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரிங்குவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருவதுடன், யமுனா நதியில் மாயமான பச்சிளம் குழந்தையைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
