“என்னுடன் ஒரு நைட் மட்டும் தங்குறியா?” 12 வயது சிறுமியை இறுக்கி அணைத்த 41 வயசு ஆசிரியர்… கடைக்குள் நடந்த பகீர் சம்பவம்…!!! – cinefeeds
Connect with us

CRIME

“என்னுடன் ஒரு நைட் மட்டும் தங்குறியா?” 12 வயது சிறுமியை இறுக்கி அணைத்த 41 வயசு ஆசிரியர்… கடைக்குள் நடந்த பகீர் சம்பவம்…!!!

Published

on

அமெரிக்காவின் புரூக்ளின் பகுதியில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறி நடந்துகொண்ட பள்ளி ஆசிரியர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 41 வயதான எமில் அகரோனோவ் என்ற அந்த ஆசிரியர், கடந்த ஜூலை 28ஆம் தேதி காலை ஒரு கடைக்குள் நுழைந்து அங்கிருந்த சிறுமியிடம் தவறான நோக்கில் பழக முயன்றுள்ளார். சிறுமி தயங்கிய நிலையிலும், அவரை வலுக்கட்டாயமாக இறுக்கமாகக் கட்டியணைத்து அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் குற்றவியல் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியிடம் தனக்கு ஒரு லத்தீன் மனைவி வேண்டும் என்று கூறிய அகரோனோவ், அன்றிரவு தன்னுடன் தங்குமாறும் கேட்டுள்ளார். இந்த அருவருக்கத்தக்கச் சம்பவம் தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, கடந்த புதன்கிழமை அன்று அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். பின்னர் வியாழக்கிழமை இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இந்தச் சம்பவத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் உடனடியாக வேறு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப் பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், இந்த ஆசிரியரால் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் தைரியமாக முன்வந்து புகார் அளிக்கலாம் என்று நியூயார்க் நகர காவல்துறை அகரோனோவின் புகைப்படத்தை வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.


Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in