“அமெரிக்க வீரரை கொன்றால் 30,000 டாலர்” பெண்களுக்கு டபுள் ஜாக்பாட்… உலகை உலுக்கிய ஈரானின் பகீர் அறிவிப்பு..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அமெரிக்க வீரரை கொன்றால் 30,000 டாலர்” பெண்களுக்கு டபுள் ஜாக்பாட்… உலகை உலுக்கிய ஈரானின் பகீர் அறிவிப்பு..!!!

Published

on

அமெரிக்க ராணுவ வீரர்களைக் கொல்பவர்களுக்கு அல்லது உயிருடன் பிடிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என ஈரான் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய ஈரான் ராணுவத் தலைமைத் தளபதி அமீர் ஹதாமி, அமெரிக்கப் படையினரைத் தாக்கும் நபர்களுக்கு தலா 30,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் 5 பில்லியன் டோமன்ஸ்) சன்மானமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தரப்பில் இருந்து வந்த தொடர் கோரிக்கைகளை அடுத்தே இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் பெண்களுக்கு ஒரு முக்கியச் சலுகையையும் ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. இந்த வீர தீரச் செயலை ஒரு துணிச்சலான ஈரான் பெண்மணி வெற்றிகரமாகச் செய்து முடித்தால், அவருக்கு இந்த வெகுமதித் தொகை அப்படியே இரட்டிப்பாக்கப்பட்டு 60,000 டாலர்களாக (சுமார் 10 பில்லியன் டோமன்ஸ்) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதமும் இரட்டிப்பு விலைக்கு வாங்கப்பட்டு, அதற்குப் பதிலாகப் புதிய ஆயுதம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், அமெரிக்கப் படைகள் பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடா மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி ஆகிய பகுதிகளுக்குள் நுழைவதற்கு இனி அனுமதி இல்லை என்றும், அவர்கள் முழுமையாக இப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் ஈரான் ராணுவத் தளபதி திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in