LATEST NEWS
இரவோடு இரவாக ரஷ்யா மீது உக்ரைனின் விஸ்வரூபத் தாக்குதல்… மாஸ்கோவைச் சூழ்ந்த 600 ட்ரோன்கள் – 3 பேர் பலி, படுபயங்கரச் சேதம்..!!
உக்ரைன் உடனான போர் 5-வது ஆண்டை எட்டியுள்ள நிலையில், ரஷ்யாவின் எல்லைப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது உக்ரைன் தனது நீண்டதூர ட்ரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை இலக்கு வைத்து ஒரே இரவில் சுமார் 600 உக்ரைனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.
இந்த வான்வழித் தாக்குதலின் போது மாஸ்கோ பிராந்தியத்தை நோக்கி வந்த ட்ரோன்களில் 201 ட்ரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக மேயர் கூறியுள்ளார். இருப்பினும், நகரின் வெளிவட்டச் சாலைப் பகுதியில் நடந்த இந்தத் தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைன் எல்லையை ஒட்டியுள்ள ரஷ்யாவின் தெற்கு ரோஸ்டோவ் பிராந்தியத்திலும் 150-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ரஷ்யப் படைகள் அழித்துள்ளன. அங்கு நடந்த தாக்குதல்களில் குடியிருப்பு மற்றும் தொழில்சார் கட்டிடங்கள், ரயில் நிலையம் ஆகியவை சேதமடைந்ததுடன், 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரோஸ்டோவ் பிராந்திய ஆளுநர் யூரி ஸ்லியூசார் தெரிவித்துள்ளார்.
