LATEST NEWS
பகீர்… கை குலுக்காததால் ரோபோவை லேசாக தள்ளிவிட்ட நபர்… ஆத்திரமடைந்து எட்டி உதைக்கப் பாய்ந்த ‘ஹியூமனாய்ட்’ ரோபோட்..! அலறியடித்து ஆஃப் செய்த ஊழியர்கள்..! ரஷ்யாவில் ஷாக்கிங் சம்பவம்..!!
உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனித வடிவிலான ரோபோட்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ரோபோக்கள் மனிதர்களின் கட்டுப்பாடு இல்லாமல் செயல்பட வாய்ப்புள்ளது என்ற அச்சமும் மனிதர்களிடையே நிலவி வருகிறது. அதற்கு வலுசேர்க்கும் வகையில் கடையில் வாடிக்கையாளரை தாக்க முயற்சித்த ரோபோவின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் உள்ள மின்னணு சாதன கடை ஒன்றில் வாடிக்கையாளர் அங்கிருந்த ரோபோவிடம் கை குலுக்க கையை நீட்டியுள்ளார். ஆனால் ரோபோ கையை நீட்டாததால் கோபத்தில் ரோபோவை லேசாக தள்ளியுள்ளார். உடனே ரோபோ அவரை தாக்க முயற்சித்துள்ளது. அங்கிருந்த ஊழியர்கள் அதனை கட்டுப்படுத்த முயற்சித்த போது அவர்களையும் தாக்க முயற்சித்தது. அதன் பிறகு அந்த ரோபோவின் இயக்கத்தை நிறுத்தினர்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் பலரும் இதனை டெர்மினேட்டர், எந்திரன் என கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய சிலர், இந்த ரோபோ ரிமோட் மூலம் இயக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
