LATEST NEWS
“லாட்டரி, திருட்டு விசிடி, சங்கி அமைச்சர்” அமைச்சர்களை அடைமொழியால் அசிங்கப்படுத்திய உதயநிதி… தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!
தமிழக அமைச்சர்களை அடைமொழிகளால் விமர்சித்து திமுக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், தமிழக அமைச்சர்களை சாதாரணப் பெயர்களால் குறிப்பிட்டால் மக்களுக்குத் தெரிவதில்லை என்றும், குறிப்பிட்ட அடைமொழிகளைச் சொன்னால் மட்டுமே மக்களுக்கு எளிதில் புரிகிறது என்றும் கூறியுள்ளார்.
அரசியல் களத்தில் எதிர்க்கட்சியினரைச் சாடும் நோக்கில் பேசிய அவர், ‘லாட்டரி விற்பவர்’, ‘திருட்டு விசிடி விற்பவர்’, ‘உருட்டு கட்டை அமைச்சர்’ ஆகிய அடைமொழிகளைப் பட்டியலிட்டார். மேலும் ‘பவுடர் போடும் அமைச்சர்’, ‘காக்கி டவுசர் அமைச்சர்’, ‘சங்கி அமைச்சர்’ எனத் தொடர்ச்சியாகப் பல்வேறு விமர்சனப் பெயர்களைக் குறிப்பிட்டு, இப்படிச் சொன்னால்தான் மக்கள் உடனே அடையாளம் கண்டுகொள்கிறார்கள் என்று அவர் விமர்சித்துள்ளார்.
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள உதயநிதி ஸ்டாலினின் இந்த அடைமொழிப் பேச்சுக்கு, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைத்தளப் பக்கங்களில் இருந்து ஆதரவும் கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன. அமைச்சர்களைப் பொதுவெளியில் இவ்வாறு தரம் தாழ்த்திப் பேசுவது முறையற்றது என ஒரு தரப்பினரும், அரசியல் நையாண்டி என மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.
