அறிவாலயத்தில் அதிரடி..!! துரைமுருகனுக்குப் பதில் கனிமொழிக்கு பொதுச்செயலாளர் பதவி..? உதயநிதிக்கும் மாஸ் புரமோஷன்.. ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அறிவாலயத்தில் அதிரடி..!! துரைமுருகனுக்குப் பதில் கனிமொழிக்கு பொதுச்செயலாளர் பதவி..? உதயநிதிக்கும் மாஸ் புரமோஷன்.. ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்..!!

Published

on

5 தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்பாக திமுகவில் கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய உயர் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய பொதுச்செயலாளர் துரைமுருகன் வயதுமூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஓய்வில் இருக்கும் நிலையில், அவருக்கு மாற்றாக கனிமொழியை கட்சியின் புதிய பொதுச்செயலாளராக நியமிக்க திமுக தலைமை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதேபோல், கட்சியின் இளைஞரணி செயலாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் இந்த மாற்றங்களின் போது முக்கியப் பதவி உயர்வு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி மற்றும் தேர்தலை எதிர்கொள்ளும் வியூகமாக இந்த அதிரடி மாற்றங்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன.

Advertisement

கட்சியில் மூத்த நிர்வாகிகளுக்குப் பதிலாக அடுத்த தலைமுறைத் தலைவர்களை முக்கியப் பொறுப்புகளில் அமர வைக்கும் நோக்கில் இந்த ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அனைத்தும் வரும் நவம்பர் 15-ஆம் தேதிக்குப் பிறகு வெளியாகலாம் என்று அறிவாலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in