LATEST NEWS
BREAKING: மீண்டும் புழல் சிறைக்கு விரைந்த உதயநிதி..! அன்பில் மகேஸை சந்தித்ததன் பின்னணி என்ன..?!
அன்பில் மகேஸை காண உதயநிதி 2-வது முறையாக புழல் சிறைக்கு சென்றுள்ளார். ரூ.100 கோடி மோசடி வழக்கில் அக்டோபர் 26-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அடுத்தநாளே புழல் சிறைக்கு சென்று உதயநிதி அவருக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று மீண்டும் சிறைக்கு சென்று அவர் நலம் விசாரித்துள்ளார். அன்பில் மகேஸுக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
