உரிய நீதி கிடைக்குமா..? பிளிங்கிட் டெலிவரி பாய் மீது கொடூரத் தாக்குதல்.. தம்பதி மீது பாய்ந்த எஃப்.ஐ.ஆர்… நெஞ்சை உறையவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

உரிய நீதி கிடைக்குமா..? பிளிங்கிட் டெலிவரி பாய் மீது கொடூரத் தாக்குதல்.. தம்பதி மீது பாய்ந்த எஃப்.ஐ.ஆர்… நெஞ்சை உறையவைக்கும் பின்னணி..!!

Published

on

மீரட்டில் பிளிங்கிட் டெலிவரி பாய் மீது தம்பதியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெலிவரி செய்ய வந்த இளைஞரை அந்தத் தம்பதியினர் சரமாரியாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த மனிதாபிமானமற்ற செயலிற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பசியைப் போக்கப் பொருட்களைக் கொண்டுவந்து சேர்க்கும் ஒரு மனிதனிடம் இப்படி வன்முறையைக் காட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையே, தாக்குதல் நடத்திய தம்பதியினர் மீது காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதுடன், வீட்டைப் பூட்டிவிட்டுத் தலைமறைவாகியுள்ள அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in