அடச்சீ நீங்கெல்லாம் போலீசா..? கால்களைக் கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டு எஸ்.எஸ்.பி அறைக்குள் 1.5 மணி நேரம் நடந்த நரக வேட்டை.. தலித் தலைவருக்கு நேர்ந்த கொடூரம்.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடச்சீ நீங்கெல்லாம் போலீசா..? கால்களைக் கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டு எஸ்.எஸ்.பி அறைக்குள் 1.5 மணி நேரம் நடந்த நரக வேட்டை.. தலித் தலைவருக்கு நேர்ந்த கொடூரம்.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!

Published

on

மீரட்டில் தலித் மாணவி லலிதா கௌதம் கொலை வழக்கு தொடர்பான போராட்டம் மற்றும் லத்தி சார்ஜ் விவகாரத்தில், பிணையில் விடுவிக்கப்பட்ட விவசாயத் தலைவர்களான திக்விஜய் பாட்டி மற்றும் மோஹித் ஜாதவ் ஆகிய இருவரைப் போலீஸ் காவலில் வைத்து கொடூரமாகத் தாக்கியதாக மீரட் மூத்த காவல் கண்காணிப்பாளர் பாண்டே மற்றும் காவல் ஆய்வாளர் அகிலேஷ் கவுர் ஆகியோர் மீது தீவிர குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் திக்விஜய் பாட்டிக்கு போராட்டங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறப்படும் நிலையிலும், நேற்று எஸ்.எஸ்.பி தனது அலுவலகத்திற்கு இருவரையும் வரவழைத்துள்ளார். அங்கு அவர்களை முதலில் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தனது தனிப்பட்ட அறையில் பூட்டி வைத்து சுமார் ஒன்றரை மணி நேரம் காலணிகள், கைகள் மற்றும் கால்களால் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதாக அந்த விவசாயத் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

BIG BREAKING |

दिग्विजय भाटी और मोहित जाटव की पिटाई का आरोप। SSP पांडे ने अपने चैंबर में डेढ़ घंटे तक दलित नेता को पीटा

*”SSP के चैम्बर में 1.5 घंटे पीटा, SOG ऑफिस में बांधकर मारा इंस्पेक्टर अखिलेश गौड़ ने” – किसान नेताओं के साथ बर्बरता के आरोप*

मेरठ में दलित छात्रा ललिता… https://t.co/qE85ewPFxl pic.twitter.com/H6M2kzEOLe— Narendra Pratap (@hindipatrakar) August 20, 2026

இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் மாவட்டத்தின் சிறப்பு அதிரடிப் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு எஸ்.ஓ.ஜி அலுவலகத்தில் வைத்து ஆய்வாளர் அகிலேஷ் கவுர், அவர்களின் கால்களைக் கட்டி, தலைகீழாகத் தொங்கவிட்டு, உள்ளங்கால்கள், இடுப்பு மற்றும் முதுகுப் பகுதிகளில் லத்திகளாலும் கைகளாலும் கொடூரமாக அடித்ததாக அதிர்ச்சிப் புகார்கள் எழுந்துள்ளன. இன்று காலை அவர்களைச் சந்தித்த பிறகுதான் இந்த அராஜகத் தாக்குதலின் கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திக்விஜய் பாட்டியின் ஒரு கண் வீங்கி, கடுமையான காயங்களுடன் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in