“நாங்க பக்கத்துல இல்லாததால தான் இப்படி தரமிறங்கி பேசுறாரு போல..” பெண்களை இழிவுபடுத்துனா சும்மா இருக்க மாட்டோம்..! ஸ்டாலினின் உருவகேலி பேச்சுக்கு கூட்டணி கட்சியே கடும் தாக்கு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நாங்க பக்கத்துல இல்லாததால தான் இப்படி தரமிறங்கி பேசுறாரு போல..” பெண்களை இழிவுபடுத்துனா சும்மா இருக்க மாட்டோம்..! ஸ்டாலினின் உருவகேலி பேச்சுக்கு கூட்டணி கட்சியே கடும் தாக்கு..!!

Published

on

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தனித்தொகுதிகளுக்கு வருகின்ற 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. நாளையுடன் பிரசாரம் முடிவடைய இருக்கிறது. தி.மு.க. வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். ரோட் ஷோ நடத்தியதுடன், மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் பேசி வாக்கு சேகரித்தார்.

அப்போது, த.வெ.க. வேட்பாளர் சத்ய பாமா குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். அவருக்கு பெட்டி பாமா என்ற பெயர் இருக்கிறது, அவருக்கு பல்டி என்ற பெயரும் இருக்கு என விமர்சனம் செய்தார். அதற்குப்பிறகு அவரது உடலை கேலி செய்யும் வகையில் உருவகேலி செய்தார். இதனால் மு.க. ஸ்டாலின் பேச்சு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. த.வெ.க. அமைச்சர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளனர். முதலமைச்சர் விஜய், மு.க. ஸ்டாலின் பேச்சை விமர்சித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisement

மு.க. ஸ்டாலின் பேச்சு குறித்து கேட்ட கேள்விக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் கூறியதாவது:- “நாங்கள் அருகில் இருக்கும் வரை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்ணியத்துடனும், சிறந்த அரசியலும் பேசி வந்தார். நாங்கள் அருகில் இல்லாத காரணத்தினாலோ, என்னமோ தெரியவில்லை தரம்புரண்டு பேசுகிறார். உருவ கேலி ஏற்புடையதல்ல. உடல் மொழியும் மிகவும் கண்ணியத்துடன் இருக்க வேண்டும். பிறரை மதிக்க வேண்டும். அதை அறியாதவர்கள் அல்ல. பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற அரசியல் தலைவர்கள் தோன்றிய இயக்கம் அது. எதை பொருட்டும் பெண்களை இழிவு செய்வதை ஏற்க முடியாது. எந்த திசையில் இருந்து வந்தாலும் அதை எதிர்க்கிறோம், நிராகரிக்கிறோம்” எனப் பேசினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in