ரூ. 50 கோடி பணம் வாங்கிக்கிட்டுத்தானே தவெகவுக்குப் போனீங்களா..? தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஓட ஓட விரட்டியடித்த கிராம மக்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரூ. 50 கோடி பணம் வாங்கிக்கிட்டுத்தானே தவெகவுக்குப் போனீங்களா..? தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஓட ஓட விரட்டியடித்த கிராம மக்கள்..!!

Published

on

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனித் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமா தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற இடத்தில், கிராம மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு சரமாரி கேள்விகளை எழுப்பி விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்தியபாமா, பதவி ஏற்ற ஒரே வாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைந்தார். இதன் காரணமாக தாராபுரம் தொகுதிக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, அவர் தவெக வேட்பாளராக மீண்டும் களம் இறங்கியுள்ளார்.

இந்நிலையில், குண்டடம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் சத்தியபாமா வாக்கு சேகரிக்கச் சென்றபோது, திரண்ட பொதுமக்கள் அவரது முகத்திற்கு நேராகவே அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தனர். குறிப்பாக, “நாங்கள் உங்களுக்குத்தானே ஓட்டுப் போட்டோம், ஓட்டுப் போட்ட மக்களுக்கு நீங்கள் சொல்லும் பதில் என்ன? விடிய விடிய சோறு இல்லாமல் உங்களுக்காக உழைத்த தொண்டனை ஏமாற்றிவிட்டு, ரூ. 50 கோடி பணம் வாங்கிக்கொண்டுதான் தவெகவுக்குப் போனீர்களா?” என ஒரு நபர் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பினார். அதற்கு சத்தியபாமா தன் பிள்ளை மீது சத்தியம் செய்து, தான் பணம் வாங்கவில்லை என மறுப்பு தெரிவித்த போதிலும், பொதுமக்கள் தொடர்ந்து ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

மேலும், விலைவாசி உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, காவிரித் தண்ணீர் பிரச்சினை போன்ற மக்கள் நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்தும் கிராம மக்கள் சத்தியபாமாவைக் கடுமையாகச் சாடினர். மக்களின் தொடர் நச்சரிப்பு மற்றும் கடுமையான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறிய தவெக வேட்பாளர் சத்தியபாமா, இறுதியில் அந்தப் பகுதியில் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யாமலேயே பாதியிலேயே ஓட்டம் பிடித்தார். தாராபுரம் தொகுதியின் பல கிராமப் பகுதிகளில் இவருக்கு எதிராக “ஏன் இந்த ராஜினாமா? யார் சொல்லி இந்த துரோகம்?” என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது தவெக தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in