நடுங்க வைக்கும் காட்சி..! சவுதி அரேபியாவில் திடீரென பற்றி எறிந்த கச்சா எண்ணெய் கிடங்கு… பின்னணியில் இருப்பது யார்..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடுங்க வைக்கும் காட்சி..! சவுதி அரேபியாவில் திடீரென பற்றி எறிந்த கச்சா எண்ணெய் கிடங்கு… பின்னணியில் இருப்பது யார்..?!

Published

on

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன. ஏமனின் தலைநகர் சனா உள்பட பல்வேறு பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதேவேளை, எண்ணெய் வளம் மிக்கப்பகுதிகளை அரசுப்படையினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதலின்போது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது ஏமன் அரசுப்படையுடன் இணைந்து சவுதியும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், கடந்த சில வாரங்களாக ஏமனில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்து வருகிறது.

Advertisement

இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள கச்சா எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தலைநகர் ரியாத்தில் உள்ள கச்சா எண்ணெய் கிடங்கில் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலால் ஏற்பட்டதா? அல்லது கச்சா எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட விபத்தால் ஏற்பட்டதா? என்பது குறித்து சவுதி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in