LATEST NEWS
“மரண பயத்திலும் 174 உயிர்களைக் காத்த மாவீரன்!” இந்திய விமானி ஸ்மித் மச்சாரை நேரில் பாராட்டிய துபாய் இளவரசர்..!!
ஃபிளைதுபாய் விமானத்தின் துணிச்சலான இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சேஹர் அவர்களின் அசாத்திய வீரத்தைப் பாராட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தலைவர்கள் மற்றும் உலகத் தலைவர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற விமானத்தில், சக விமானி (Co-pilot) அவரைத் தாக்கி விமானத்தைக் கீழே வீழ்த்த முயன்றபோது, மிகக் கடுமையான காயங்கள் மற்றும் இரத்தப் போக்கிற்கு இடையிலும் அவர் காட்டிய அசாத்திய மன உறுதி ஒரு மாபெரும் விமான விபத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளது.
மரணத்தின் விளிம்பில் இருந்தபோதும், 174 பயணிகளின் உயிரைக் காக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு, கேப்டன் ஸ்மித் மச்சேஹர் காக்பிட் (Cockpit) கதவைத் திறக்க ஒரு இறுதி முயற்சியை மேற்கொண்டார். இதன் மூலம் பிற ஊழியர்களும் பயணிகளும் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியவரை முறியடிக்க முடிந்தது. இந்த இக்கட்டான சூழலில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு, மனித உயிர்கள் மீதான அக்கறை மற்றும் மிகச் சரியான நேரத்தில் எடுத்த முடிவுகள் ஆகியவை ஒரு வரலாற்றுப் பேரழிவைத் தடுத்து, ஒட்டுமொத்தப் பயணிகளையும் பத்திரமாக மீட்டெடுத்துள்ளது.
மனிதநேயத்தின் உன்னத அடையாளமாகத் திகழும் இத்தகைய மாவீரர், தங்களது குழுவில் இருப்பதிலும், நாட்டின் வரலாற்றுப் பயணத்தில் ஒரு அங்கமாக விளங்குவதிலும் ஐக்கிய அரபு அமீரகம் பெருமிதம் கொள்கிறது. அன்பு, அமைதி மற்றும் மனித வாழ்வைப் போற்றும் நாடாகத் திகழும் அமீரகம், மக்களின் பாதுகாப்பிற்காகத் தன் உயிரையே பணையம் வைத்த கேப்டன் ஸ்மித் மச்சேஹரின் அசாத்திய துணிச்சலுக்குத் தனது உயர்ந்த மரியாதையையும் மனமார்ந்த வாழ்த்துகளையும் சமர்ப்பிக்கிறது.
