LATEST NEWS
அடேங்கப்பா..! “எமனுக்கே சவால் விட்ட பாட்டி..!” 92 வயதில் மிரள வைக்கும் அசத்தல் சாதனை.. இணையத்தை அதிர வைக்கும் வைரல் வீடியோ..!!
தன் நரம்புத்தளர்ச்சி நோயின் தாக்கம் காரணமாகவும், தனது இளமைக் கால உடற்பயிற்சி மற்றும் ஏறும் பழக்கத்தின் காரணமாகவும், 92 வயது மூதாட்டி ஒருவர் நர்சிங் ஹோம் காவல்கண்காணிப்பு கேமராவில் சிக்கிய சம்பவம் அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது. நர்சிங் ஹோமில் உள்ள 2.15 மீட்டர் உயரமுள்ள இரும்பு வேலியை வெறும் 24 வினாடிகளுக்குள் மின்னல் வேகத்தில் ஏறி குதித்து அவர் வெளியேறிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடுமையான நினைவாற்றல் குறைபாடு இருந்தாலும், தனது பழைய உடற்பயிற்சி திறனை வெளிப்படுத்தி அவர் செய்த இந்த சாகசம் இணையத்தில் வைரலாகி பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
🇨🇳😱Une Femme de 92 ans a été filmée par une caméra de surveillance en train d’escalader une GRILLE DE 2,15 MÈTRES pour quitter sa maison de retraite.
En seulement 24 SECONDES, elle s’est hissée jusqu’au sommet, puis a atterri de l’autre côté. Le directeur de l’établissement a… pic.twitter.com/zRb6hDOplw— Cultination (@Cultination1) August 17, 2026
இந்தச் சம்பவம் குறித்துத் தெரிவித்த காப்பகத்தின் இயக்குநர், அந்த மூதாட்டிக்கு கடுமையான அல்சைமர் பாதிப்பு உள்ளதாகவும், கடந்த காலத்தில் அவர் உடற்பயிற்சி செய்வதையும் ஏறுவதையும் மிகவும் விரும்பிச் செய்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். வேலையை முடித்துவிட்டு அவர் வெளியேறிய சில நிமிடங்களிலேயே காப்பகத்திற்கு அருகில் அவர் பத்திரமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 92 வயதில் எமனுக்கே சவால் விடும் வகையில் அவர் காப்பகத்தின் வேலையைத் தாண்டிய இந்தத் துணிச்சலான செயல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
