“இன்ஸ்டா சாட்டிங்கில் தொடங்கிய பழக்கம்…. 4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. வைரலான வீடியோவால் வெளிச்சத்துக்கு வந்த சம்பவம்.. 2 காமக்கொடூரர்கள் செய்த வெறிச்செயல்.. நெஞ்சை நடுங்க வைக்கும் பின்னணி..!!” – cinefeeds
Connect with us

CRIME

“இன்ஸ்டா சாட்டிங்கில் தொடங்கிய பழக்கம்…. 4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. வைரலான வீடியோவால் வெளிச்சத்துக்கு வந்த சம்பவம்.. 2 காமக்கொடூரர்கள் செய்த வெறிச்செயல்.. நெஞ்சை நடுங்க வைக்கும் பின்னணி..!!”

Published

on

மராட்டிய மாநிலம் பால்கர் பகுதியில் 14 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து மணிக்கணக்கில் சாட்டிங் செய்து வந்த நிலையில், கடந்த மாதம் 11-ஆம் தேதி சிறுமியை தனியாக சந்தித்து பேச வேண்டும் எனக் கூறி, அப்பகுதியில் உள்ள சாவடி ஒன்றுக்கு சிறுவன் வரவழைத்ததாக கூறப்படுகிறது. இதை நம்பி அங்கு சென்ற சிறுமியை, அந்த சிறுவன் தனது நண்பருடன் சேர்ந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, மறைவான இடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து அந்த சம்பவத்தை செல்போனில் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், சிறுமியின் உறவினர் ஒருவர் சமூக வலைதளத்தில் சிறுமி தொடர்பான ஆபாச வீடியோ இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அவர் கதறி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் இரு சிறுவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in