LATEST NEWS
“அய்யோ கடவுளே..” ஹோட்டல் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்த 25 வயது வாலிபர்.. நொடிப்பொழுதில் நேர்ந்த கொடூரம்… நடுங்க வைக்கும் சிசிடிவி வீடியோ…!!
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு ஹோட்டலின் தாழ்வாரத்தில் நின்று கொண்டிருந்த 25 வயதான தொழில்முறை பாடகர் கௌரவ், எதிர்பாராதவிதமாக 11 கேவி உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் கை பட்டு மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கௌரவ் தனது பெண் தோழி ஒருவருடன் அந்த ஹோட்டலுக்கு வந்திருந்தபோது இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. ஓட்டல் தாழ்வாரத்தின் ஜன்னல் வழியே அவர் வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது கை அருகில் மிக நெருக்கமாகச் சென்றுகொண்டிருந்த அதிஉயர் மின் அழுத்தக் கம்பியின் மீது பட்டுள்ளது; இதனால் நொடிப்பொழுதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து உடல் கருகி உயிரிழந்தார்.
இந்த நெஞ்சை உலுக்கும் கொடூர விபத்தின் ஒட்டுமொத்தக் காட்சிகளும் அந்த ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகேமராவில் பதிவாகி தற்பொழுது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பாடகர் கௌரவ் உத்தரப் பிரதேசத்தின் கௌதம புத்தா நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனப் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கௌரவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஓட்டல் கட்டிடத்திற்கு மிக அருகில் இவ்வளவு ஆபத்தான முறையில் உயர் அழுத்த மின்கம்பி செல்ல அனுமதித்தது யார் என்றும், ஓட்டல் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு குறித்தும் போலீசார் தற்பொழுது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
