LATEST NEWS
நான் சொல்லியும் கரூர் சம்பவத்தில் விஜய் மீது ஏன் கேஸ் போடல.. ? திமுக, மீது திருமா பாய்ச்சல்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!
கரூர் நெரிசல் சம்பவத்தில் தான் வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது திமுக அரசு ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார். தவெகவை குறைத்து மதிப்பிட்ட திமுகவின் தவறான அணுகுமுறையே அக்கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணம் என்றும், கரூரில் விஜய் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வந்ததால் தான் கூட்டம் கூடி, நெரிசலால் உயிரிழப்புகள் ஏற்பட்டன என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவத்திற்குப் பொறுப்பான அனைவர் மீதும் திமுக அரசு வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும் என அவர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
முன்னதாக விஜய்யின் அரசியல் நகர்வுகளை திமுக ஆரம்பத்திலேயே அம்பலப்படுத்தி, அவருக்கு எதிராக எதிர்ப்பு அரசியலைச் செய்திருக்க வேண்டும் என்று திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார். தான் மட்டுமே ஆரம்பத்தில் விஜய்யை “ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்தப் பிள்ளை” என விமர்சித்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய புதிய அரசியல் சூழலில் கூட்டணி அமைந்தது குறித்தும் விளக்கியுள்ளார். விஜய் தங்களை நோக்கி வந்தாரே தவிர, தாங்கள் அவரிடம் போகவில்லை என்றும், தங்களுக்கு அவரின் தேவை இருக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், விஜய் தங்களை நாடி வந்தபோது உருவான தற்போதைய புதிய கூட்டணியில், விசிகவின் அழுத்தமான கோரிக்கையின் பேரில் தான் ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது என்று திருமாவளவன் வெளிப்படுத்தியுள்ளார். அதன்படியே இந்தத் தளம் “மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி” எனப் பெயரிடப்பட்டு உருவானது என்று விவரித்த அவர், ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர் எனத் தான் விமர்சித்த திருமாவளவனை ஏன் கூட்டணியில் சேர்த்தீர்கள் என்று விஜய்யை யாரும் கேள்வி கேட்கவில்லை என்றும் இந்த மேடையில் சாடியுள்ளார்.
