LATEST NEWS
“ஆபாச பேச்சு + வன்மம் + அவதூறு = திமுகவின் தலைமை தகுதி சான்றிதழ்” ஜெயலலிதாவையே ஆபாசமா பேசினாங்க… மு.க.ஸ்டாலினின் பழைய வீடியோவை வெளியிட்டுப் பதிலடி கொடுத்த தவெக..!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டங்களிலும், தேர்தல் பிரச்சாரங்களிலும் ஆபாசமாகப் பேசியதாகக் கூறி, அது தொடர்பான வீடியோ ஆதாரத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தகவல் தொழில்நுட்ப அணி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத்தில் மிசா சிறைவாசம் குறித்து முதலமைச்சர் விஜய் பேசிய உடல்மொழி செய்கைக்குத் திமுகவினர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தவெக இந்த வீடியோவை வெளியிட்டுப் பதிலடி கொடுத்துள்ளது.
அந்தப் பதிவில் திமுகவின் அரசியல் நாகரிகத்தைக் கடுமையாகச் சாடியுள்ள தவெக ஐடி விங், “தலைமுறை தலைமுறையாகத் தொட்டுத் தொடரும் திமுகவின் ஆபாச பாரம்பரியம்” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளது. மேடைகளில் பெண்ணியம் மற்றும் பெண் விடுதலை பற்றிப் பேசும் திமுகவினர், கட்சி மேடை, கல்யாண மேடை, பொது மேடை என எங்குப் பேசினாலும் ஆபாசத்தை மட்டுமே தங்களது கொள்கையாகக் கொண்டு பேசி வருகிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், “குடும்ப வாரிசு + ஆபாச பேச்சு + வன்மம் + அவதூறு = திமுகவின் தலைமை தகுதி சான்றிதழ்” என்று பதிவிட்டுள்ள தவெக, ஊருக்கு மட்டும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று உபதேசம் செய்துவிட்டு அவர்கள் பேசுவது அனைத்தும் ஆபாசமும் அசிங்கமும் தான் என்று சாடியுள்ளது. இவர்களின் பேச்சிலேயே இவ்வளவு ஆபாசம் கலந்திருந்தால், இவர்களது ஆட்சிக்காலத்தில் எத்தகைய கண்ணியம் இருந்திருக்கும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளதால், தற்போது திமுக – தவெக இடையேயான அரசியல் யுத்தம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
