“இனி டோல்கேட்டில் நிக்கவே வேண்டாம்” வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்… மார்ச் முதல் வருகிறது புதிய நடைமுறை…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இனி டோல்கேட்டில் நிக்கவே வேண்டாம்” வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்… மார்ச் முதல் வருகிறது புதிய நடைமுறை…!!

Published

on

இந்தியாவின் சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமல், தானியங்கி முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் புதிய தொழில்நுட்ப நடைமுறை வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முழுமையாக அமலுக்கு வரும் என்று ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தற்போதைய பாஸ்டேக் தொழில்நுட்பத்துடன் செயற்கைக்கோள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த அதிநவீன டிஜிட்டல் சுங்கக் கட்டண உள்கட்டமைப்பு பணிகளில், சுமார் 60 முதல் 70 சதவீத பணிகள் இந்த 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவடைந்துவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய தடையற்ற கட்டண முறையின் மூலம் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டிய அவசியம் முற்றிலும் தவிர்க்கப்படும்.

Advertisement

இந்த தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக, நாடு முழுவதும் சுங்கச்சாவடி காத்திருப்புகளால் வீணாகும் ஆண்டுக்கு 71 கோடி மணிநேரப் பயண நேரமும், 56 கோடி லிட்டர் எரிபொருளும் மிச்சப்படுத்தப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் கால விரயம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு பெருமளவில் குறைக்கப்பட்டு, இந்தியாவின் நெடுஞ்சாலைப் பயணம் மேலும் விரைவானதாகவும், சுற்றுச்சூழல் சார்ந்த நன்மைகளைத் தருவதாகவும் மாறும் என தினகரன் செய்திகள் தெரிவிக்கின்றன.



Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in