Detention Order-ல் என்ன இருந்தது..? ஸ்டாலின் மிசா கைதின் அவிழும் மர்ம முடுச்சுகள்… டிடென்ஷன் காப்பி’ எங்கே..? திமுகவுக்கு எதிராக எழும் ஒற்றைக் கேள்வி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

Detention Order-ல் என்ன இருந்தது..? ஸ்டாலின் மிசா கைதின் அவிழும் மர்ம முடுச்சுகள்… டிடென்ஷன் காப்பி’ எங்கே..? திமுகவுக்கு எதிராக எழும் ஒற்றைக் கேள்வி..!!

Published

on

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கருணாநிதியின் மகன் என்பதற்காக மட்டுமே திமுகவில் தலைவராக உருவாகவில்லை; நெருக்கடி நிலை காலத்தில் ‘மிசா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் கொடுமைகளை அனுபவித்ததாலேயே அவருக்கு இந்த அங்கீகாரம் கிடைத்தது என்பதே திமுகவின் பிரதான அரசியலாக இருந்து வருகிறது. ஆனால், மு.க.ஸ்டாலினின் அரசியல் அடித்தளமாக விளங்கும் இந்த ‘மிசா’ குறித்த பிம்பம், கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்தே பல்வேறு விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகி ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தச் சர்ச்சை முதன்முதலில் எழுந்தபோதே, திமுக தரப்பிற்கு எதிராக ஒரு முக்கியமான கேள்வி முன்வைக்கப்பட்டது. எமர்ஜென்சி காலத்தில் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவருக்கும் அரசு தரப்பில் ‘கைது ஆணை’ (Detention Copy) வழங்கப்படுவது வழக்கம். அப்படியிருக்க, மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் தான் கைது செய்யப்பட்டார் என்றால், அதற்கான ‘டிடென்ஷன் காப்பி’ எங்கே என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டது. ஆனால், திமுக தலைமையோ அல்லது மு.க.ஸ்டாலின் தரப்போ இதுவரை அந்த ஆவணத்தை மக்கள் முன் வெளியிடவில்லை என்பது இந்தச் சந்தேகத்தை மேலும் வலுக்கச் செய்துள்ளது.

Advertisement

இந்நிலையில், சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “நாங்களும் மிசாவைப் பார்த்திருக்கிறோம்… அதற்கான வரலாறும் எங்களுக்குத் தெரியும்” என்று குறிப்பிட்டது அரசியல் களத்தில் மீண்டும் அனலைக் கூட்டியுள்ளது. மு.க.ஸ்டாலின் உண்மையில் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாரா அல்லது எமர்ஜென்சி அமலில் இருந்த காலத்தில் சாதாரண சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாரா என்ற விவாதம் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது. எமர்ஜென்சி காலத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டதை யாரும் மறுக்கவில்லை என்றாலும், கைது செய்யப்பட்டதற்கான சட்டப் பிரிவு என்ன என்பதே இங்கு பிரதான கேள்வியாக மாறியுள்ளது.

அன்றைய காலகட்டத்தில் மு.க.ஸ்டாலின் தீவிர அரசியலில் ஈடுபடாத ஒரு இளைஞராகவே இருந்தார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியைப் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டிருந்தார் என்றால், அன்றைய சூழலில் எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகக் திரைப்படங்களில் நடித்துக் கொண்டு, கருணாநிதியால் அரசியல் ரீதியாக முன்னிறுத்தப்பட்டு வந்த அவரது மூத்த மகன் மு.க.முத்துவைக் கைது செய்திருக்கக் கூடும். ஆனால், கருணாநிதியின் மற்ற மகன்களான மு.க.அழகிரி, மு.க.தமிழரசு அல்லது மு.க.முத்து என யாருமே கைது செய்யப்படவில்லை; தீவிர அரசியலில் இருந்த முரசொலி மாறன் மட்டுமே அப்போது கைது செய்யப்பட்டார் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

Advertisement

மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில்தான் கைது செய்யப்பட்டார் என்பதற்கு திமுக தரப்பில் கூறப்படும் ஆதாரங்கள், கருணாநிதி எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’ மற்றும் துர்கா ஸ்டாலின் எழுதிய ‘அவரும் நானும்’ ஆகிய புத்தகங்களே ஆகும். இவை சுயசரிதை சார்ந்த புத்தகங்களே தவிர, அதிகாரப்பூர்வ சட்டப்பூர்வ ஆதாரங்கள் அல்ல என்று எதிர்கட்சியினர் வாதிடுகின்றனர். ஒரு நபரின் அரசியல் தியாகத்திற்குப் பின்னணியில் உள்ள சட்டப்பூர்வ ஆவணத்தை விடுத்து, சொந்தப் புத்தகங்களைச் சான்றாகக் காட்டுவதை ஏற்க முடியாது என்பதும் அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

எனவே, மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ‘டிடென்ஷன் காப்பி’ எங்கே உள்ளது, அதில் எந்தக் காரணத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. அந்த ஆவணம் உண்மையிலேயே உள்ளதா அல்லது அடுத்தடுத்த ஆண்டுகளில் திட்டமிட்டு அழிக்கப்பட்டதா என்பதை திமுக தரப்பு வெளிப்படையாக விளக்க வேண்டும் என்பதே தற்போதைய அரசியல் சூழலில் தமிழக மக்களின் ஒருமித்த கேள்வியாக உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in