CRIME
“ஐயோ இது என்ன கொடுமை..” 5 நிமிடத்தில் பிணமாக மாறிய நபர்.. விசாரணையின்போது சிரித்த மருத்துவர்கள்…நடந்தது என்ன..? கதறி துடிக்கும் குடும்பத்தினர்..!!
தேவாஸில் உள்ள அமல்தாஸ் மருத்துவமனையில் 30 வயது நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டார். நோயாளி நலமாக இருந்த நிலையில், குடும்பத்தினரை ஐந்து நிமிடங்கள் வெளியே செல்லச் சொன்ன மருத்துவர், சிறிது நேரத்தில் திரும்பி வந்து அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார். சற்று முன்பு வரை நன்றாகப் பேசியவர் திடீரென்று இறந்ததற்கான காரணத்தைக் கேட்க குடும்பத்தினர் முயன்றபோது, மருத்துவர் எந்தப் பதிலும் அளிக்காமல் உடனே இறுதிச் சடங்குகளுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.
மருத்துவரின் சந்தேகத்திற்கிடமான இந்தச் செயலால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர், உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் விசாரணைக்கு வந்தபோதும் சம்பந்தப்பட்டவர்கள் எந்தவித வருத்தமும் இன்றி சிரித்துக் கொண்டிருந்தது நிலைமையை மேலும் தீவிரமாக்கியுள்ளது. திடீர் மரணம் மற்றும் மருத்துவக் குழுவின் இந்த அலட்சியப் போக்கு அந்த மருத்துவமனை மீது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
