CRIME
“ஐயோ.. 365 நாட்களாக பூட்டியிருந்த பங்களா… உள்ளே காத்திருந்த கொடூர நிஜம்..!” பெங்களூருவை உலுக்கிய பெண் எலும்புக்கூடு.. கண்ணீர் சிந்த வைக்கும் பிண்ணனி..!!
பெங்களூரு பகலகுண்டே பகுதியில் உள்ள ஹாவனூர் லேஅவுட்டில் அமைந்த இரண்டு மாடி வீடு ஒன்றில், 52 வயதான தாக்ஷாயிணி என்ற பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தனது கணவர் மற்றும் மகனின் மறைவுக்குப் பிறகு கடும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே இவரது கணவர் உமேஷ் இறந்துவிட்ட நிலையில், அவரது மகனும் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.
The skeleton of a 52-year-old woman was found inside a duplex house in Bengaluru’s Bagalagunte area.
The woman has been identified as 52-year-old Dakshayini.
The police suspect she had died nearly a year ago, with her body remaining undiscovered inside the house until now.
The… pic.twitter.com/A5NBsYX0uP— Hate Detector 🔍 (@HateDetectors) August 8, 2026
கடந்த ஒரு வருடமாக இவரைப் பார்க்க இவரது மகளோ அல்லது மருமகனோ வீட்டிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் இறந்து ஏறத்தாழ ஒரு வருடம் ஆகியிருக்கலாம் என்றும், யாருக்கும் தெரியாமல் உடலானது வீட்டிற்குள்ளேயே அழுகி எலும்புக்கூடானதாகவும் காவல்துறை சந்தேகிக்கிறது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த பகலகுண்டே காவல்துறையினர், இடத்தை நேரில் ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவரது மரணத்திற்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
