“டாக்டர்களா இவர்கள்..? குழந்தையைப் பெற மட்டும்தான் தெரியுமா?” அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளிடம் ஆபாசமாக பேசிய மருத்துவர்கள்.. வீடியோ எடுத்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. நெட்டிசன்களை கொதிக்க வைத்த சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“டாக்டர்களா இவர்கள்..? குழந்தையைப் பெற மட்டும்தான் தெரியுமா?” அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளிடம் ஆபாசமாக பேசிய மருத்துவர்கள்.. வீடியோ எடுத்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. நெட்டிசன்களை கொதிக்க வைத்த சம்பவம்..!!

Published

on

அரசு மருத்துவமனை ஒன்றிற்குப் பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணிப் பெண்களிடம், அங்கிருந்த மருத்துவர்கள் மிகவும் மோசமான மற்றும் அருவருப்பான வார்த்தைகளைப் பேசி வசைபாடியுள்ளனர். “உங்களுக்கு வேறு வேலையே இல்லையா, குழந்தைகளைப் பெற மட்டும்தான் தெரியுமா?” என மனதை உடுக்கும் வகையில் தரக்குறைவாகப் பேசியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்துள்ள மனைவியிடம் மருத்துவர்கள் இவ்வளவு அசிங்கமாகப் பேசுவதைக் கண்டு கொதித்தெழுந்த கணவர், அதைத் தட்டிக்கேட்டுள்ளார். மேலும், இந்த அராஜகத்தை ஆதாரத்திற்காகத் தனது செல்போனில் வீடியோ எடுக்க முயன்றபோது, அங்கிருந்த பாதுகாவலர்களும் மருத்துவர்களும் சேர்ந்து அந்த நபரைக் கொடூரமாகத் தாக்கியதுடன் அவரது செல்போனையும் பிடுங்கிக் கொண்டுள்ளனர்.

सरकारी अस्पताल में गर्भवती महिलाओं के साथ डॉक्टरों ने अपमानजनक भाषा बोला गया कि– कोई काम नहीं है, सिर्फ बच्चे पैदा करना जानती हो।

जब उसके पति ने विरोध किया तो गार्ड्स और डॉक्टरों ने मिल कर मारपीट की। वीडियो बनाने पर मोबाइल भी छीन लिया गया।

सोचो, जो महिला अपने बच्चे को जन्म देने… pic.twitter.com/mBo99Ytl8I— Mandeep RajBhar (@MandeepRajBhar9) August 8, 2026

தாய்மை அடையும் ஒவ்வொரு பெண்ணும் உரிய மரியாதையுடனும், பாதுகாப்பான முறையிலும் சிகிச்சை பெற வேண்டியது அவர்களின் அடிப்படை உரிமையாகும். ஆனால், குழந்தையைப் பெற்றெடுக்க வந்த இடத்தில் சிகிச்சைக்குப் பதிலாக அவமானத்தையும், அச்சத்தையும் மட்டுமே பரிசாகப் பெறும் சூழலில் அந்தப் குடும்பத்தினர் எத்தகைய மனவேதனையை அனுபவிப்பார்கள் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய மருத்துவமனையே, இவ்வாறு அராஜகத்தின் கூடாரமாக மாறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in