LATEST NEWS
“இனி ‘இந்த’ டைம்ல மட்டும்தான் போக முடியும்..” அரசு மருத்துவமனைகளில் அமைச்சர் அருண்குமார் போட்ட புது ரூல்ஸ்.. வெளியான அதிரடி அறிவிப்பு..!!
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பார்க்க வரும் பார்வையாளர்களுக்குக் கடுமையான நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றும், அது கட்டாயமாகப் பின்பற்றப்படும் என்றும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதன்படி, இனிவரும் நாட்களில் மதியம் 1-2 மணி வரையிலும், மாலை 4-6 மணி வரையிலும் மட்டுமே பார்வையாளர்கள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும், நோயாளிகளுக்குத் தரமான உணவு வழங்கப்படும் என்றும், வெளியில் உள்ள கடைகளில் இருந்து உணவு வாங்கி வரும்போது பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் இருந்து உணவு கொண்டு வந்தால் பாத்திரங்களில் மட்டுமே எடுத்து வர வேண்டும் என்றும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாகத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் அதிக கூட்டம் இருப்பதைத் தடுப்பதற்காக எடுக்கப்படும் இத்தகைய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு மக்களிடம் இருந்து சில எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இருப்பினும், “அரசு மருத்துவமனைகள் அனைத்தும் தனியார் மருத்துவமனைகளின் தரத்திற்கு மேல் இருக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் எதிர்பார்ப்பு, அனைவரின் ஒத்துழைப்புடன் முதலமைச்சரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம்” என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
