CRIME
என்னப்பா இது..? டாக்டர்களுக்கு மருந்துக்கு பதிலா சரக்கு சப்ளை… போதையில் கலகலக்கும் பீகார்… வசமாக சிக்கிய இளம்பெண்..!!
மருத்துவப் பிரதிநிதி என்ற போர்வையில் மதுபானக் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் நேஹா ஜா என்ற பெண்ணின் பின்னணி குறித்து ரயில்வே மற்றும் உள்ளூர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கமாக மருத்துவப் பிரதிநிதிகள் மருத்துவர்களிடம் மருந்துப் மாதிரிகளைக் கொண்டு செல்லும் நிலையில், நேஹா ஜா அந்தப் போர்வையைப் பயன்படுத்தி தர்பங்காவில் உள்ள பிரபல மருத்துவர்கள் மற்றும் செல்வாக்குமிக்க நபர்களுக்கு உயர்தர வெளிநாட்டு மதுபானங்களை ரகசியமாக விநியோகித்து வந்ததாகக் கூறப்படுகிறது. எந்தவொரு ஓட்டுநர் அல்லது உதவியாளரிடமும் கொடுக்காமல், நேரடியாக மருத்துவர்களின் மருத்துவமனை அல்லது வீடுகளுக்கே சென்று கொடுத்து நம்பிக்கை பெற்றதாகவும், இதனால் அவர் மீது சந்தேகம் எழவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் இருந்து ஜெயநகர் சென்ற சுதந்திர சேனாணி எக்ஸ்பிரஸ் ரயிலின் First AC பெட்டியில் நேஹா ஜா பயணம் செய்தபோது, சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் வைத்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து அவரை மடக்கிப் பிடித்தனர். சோதனையின் போது, அவரிடம் இருந்த பை மற்றும் சூட்கேஸ்களில் இருந்து சுமார் 75 லிட்டர் மதிப்பிலான வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பரிசோதனையின் போது காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் வீடியோ பதிவோடு சோதனை செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதாகவும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முசாபர்பூர் ரயில்வே எஸ்பி உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறப்பு விசாரணைத் குழு அமைக்கப்பட்டுள்ளது. நேஹா ஜாவின் குடும்பப் பின்னணியை ஆய்வு செய்ததில், அவரது தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் மீதும் ஏற்கனவே மதுக்கடத்தல் தொடர்பான வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. அரியானா போன்ற பிற மாநிலங்களில் இருந்து இந்த மதுபானங்கள் எவ்வாறு பீகாருக்குக் கொண்டு வரப்பட்டன, இதற்குப் பின்னால் பெரிய கடத்தல் கும்பல் உள்ளதா மற்றும் தர்பங்காவில் இதைப் பெற்றுக் கொண்ட முக்கிய நபர்கள் யார் என்பது குறித்தும் நேஹாவின் பயணப் பதிவுகள் மற்றும் செல்போன் விவரங்களை வைத்து எஸ்.ஐ.டி அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
