“என்னை கல்யாணம் பண்ணு..!” மறுத்த காதலியை கொடூரமாகக் தீர்த்துக்கட்டிய கொடூர காதலன்.. ஐதராபாத்தில் அரங்கேறிய நடுங்க வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என்னை கல்யாணம் பண்ணு..!” மறுத்த காதலியை கொடூரமாகக் தீர்த்துக்கட்டிய கொடூர காதலன்.. ஐதராபாத்தில் அரங்கேறிய நடுங்க வைக்கும் சம்பவம்..!!

Published

on

ஐதராபாத் பாலாபூர் எல்லைக்குட்பட்ட பிஸ்மில்லா நகரில் காதலியை கொடூரமாகக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டிவிட்டுத் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரெகானா மற்றும் முகமது சலாம் இருவரும் காதலித்து வந்துள்ள நிலையில், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சலாம் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த சலாம் கத்தியால் ரெகானாவைத் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளார்; இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவான காதலனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in