“என்னை ரொம்ப டார்ச்சர் பண்றாங்க…” தோழிக்கு அனுப்பிய கடைசி வாய்ஸ் மெசேஜ்… அடுத்த நிமிடமே நர்சிங் மாணவி எடுத்த முடிவு.. நடுங்க வைக்கும் அதிர்ச்சி பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“என்னை ரொம்ப டார்ச்சர் பண்றாங்க…” தோழிக்கு அனுப்பிய கடைசி வாய்ஸ் மெசேஜ்… அடுத்த நிமிடமே நர்சிங் மாணவி எடுத்த முடிவு.. நடுங்க வைக்கும் அதிர்ச்சி பின்னணி..!!

Published

on

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி அன்சிஜி (21), கல்லூரிக்கு செல்போன் கொண்டு வந்ததாகக் கூறி முதல்வர் ஷீஜா மற்றும் ஆசிரியர்களால் சக மாணவிகள் முன்னிலையில் கடுமையாகக் கண்டித்து அவமானப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, தன்னை கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து மனரீதியாகத் துன்புறுத்துவதாகத் தனது தோழிகளுக்குக் கண்ணீருடன் குரல் பதிவு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி, திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பெற்றோரின் புகாரின் அடிப்படையில் கருங்கல் காவல்துறையினர் கல்லூரி முதல்வர் ஷீஜா மற்றும் நிர்வாகத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ளவர்களைத் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in