LATEST NEWS
“தினமும் டீ குடிப்பதை நிறுத்துனா லட்சாதிபதி ஆகலாம்” அந்த காசை அப்படியே சேமிச்சா போதும்…. எஸ்பிஐ-யின் புதிய திட்டம்…
எஸ்பிஐ வங்கியானது, மக்கள் தங்களது தேநீர் குடிக்கும் பழக்கத்தைக் குறைத்து, அந்தச் செலவைச் சேமிப்பதன் மூலம் லட்சாதிபதியாகும் நோக்கில் ‘ஹர் கர் லக்பதி’ (HGL – ஒவ்வொரு வீட்டிலும் லட்சாதிபதி) என்ற புதிய பிரத்யேக தொடர் வைப்புத் திட்டத்தை (ரெக்கரிங் டெபாசிட்) அறிமுகப்படுத்தியுள்ளது. கடைகளில் தினமும் டீ குடிப்பதற்காகச் செலவிடும் சிறிய தொகையை வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாகச் சேமித்து, இத்திட்டத்தின் முதிர்வில் ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பெரிய தொகையைத் திரட்டி லட்சாதிபதியாக முடியும்.
இத்திட்டம் இந்தியாவில் வாழும் அனைத்து தனிநபர்களுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், தனி நபர் கணக்காகவோ அல்லது இருவர் இணைந்தோ இக்கணக்கைத் தொடங்கலாம். மேலும், தெளிவாகக் கையெழுத்திடக்கூடிய 10 வயதுக்கு மேற்பட்ட சிறார்களும் தங்களின் பெயரிலோ, அல்லது தங்களது பெற்றோர் மற்றும் சட்டப்பூர்வ பாதுகாவலருடன் இணைந்தோ இச்சேமிப்புக் கணக்கைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான முதலீட்டுக் காலம் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இச்சேமிப்புத் திட்டத்தின் முதிர்வுத் தொகையானது அருகிலுள்ள ரூபாய்க்கு முழுமையாக்கப்பட்டு, வாடிக்கையாளர்களின் இறுதித் தவணை செலுத்தப்பட்ட 30 நாள்களுக்குப் பிறகு வழங்கப்படும். அல்லது வைப்புத் தொகை ஏற்றுக்கொள்ளப்பட்ட கால அளவு முடிவடையும் தேதி ஆகியவற்றில் எது அதிகபட்சமோ, அந்தத் தேதியில் வாடிக்கையாளர்களுக்கு முதிர்வுத் தொகை முழுமையாகக் கிடைக்கும் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
