LATEST NEWS
அடக்கடவுளே..! வங்கிக்குள்ளேயே பெட்ரோல் ஊற்றித் தற்கொலை முயன்ற தம்பதி .. கடைசி நொடியில் நடந்த ட்விஸ்ட்.. சோஷியல் மீடியாவை உலுக்கும் வீடியோ..!!
ஆந்திர மாநிலம் கல்யாணதுர்க் தொகுதிக்குட்பட்ட குண்டெர்பியில் உள்ள கனரா வங்கி கிளையில், தாயாரின் ஓய்வூதியப் பணத்தை எடுக்க வந்த நாகேந்திரா – சந்திரகலா தம்பதியினர் வங்கி வளாகத்திலேயே பெட்ரோல் ஊற்றித் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்திரகலாவின் மாமா பெயரில் நிலுவையில் உள்ள பயிர்க்கடனை காரணம் காட்டி, தாயாரின் ஓய்வூதியப் பணத்தை வழங்க வங்கி ஊழியர்கள் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
తల్లికి వందనం డబ్బు డ్రా చేయనివ్వలేదని దంపతులు ఆత్మహత్యాయత్నం
కళ్యాణదుర్గం నియోజకవర్గం కుందుర్పిలో ఘటన
కుందుర్పి కెనరా బ్యాంక్ వద్ద పెట్రోల్ పోసుకుని ఆత్మహత్యకు యత్నించిన నాగేంద్ర, చంద్రకళ దంపతులు
చంద్రకళ మామ పేరిట క్రాప్ లోన్ పెండింగ్లో ఉన్నందున తల్లికి వందనం డబ్బులు డ్రా… pic.twitter.com/BHL16ZqLmc— Telugu Feed (@Telugufeedsite) July 28, 2026
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தம்பதியினர், வங்கியின் உள்ளேயே பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அங்கிருந்த வாடிக்கையாளர்களும் உள்ளூர் பொதுமக்களும் உடனடியாகத் தலையிட்டு அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வங்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், தம்பதியின் இந்த அதிரடி முடிவாலும் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
