LATEST NEWS
“அவன் இல்லைனா என்ன.. நான் இருக்கேன்..!” சொத்துக்காக ஓடிய மகன்.. தந்தைக்காக மகள் எடுத்த அதிரடி முடிவு.. நெட்டிசன்களை கண்கலங்க வைத்த வீடியோ..!!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கார்வேட்டிநகர் பகுதியில் சொத்துக்காகப் பெற்ற தந்தையின் இறுதிச்சடங்கை மகன் புறக்கணித்த நெஞ்சை உருக்கும் சோகமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உயிரிழந்த தந்தை தனக்கு எந்தவிதமான சொத்துக்களையோ அல்லது உடைமைகளையோ எழுதி வைக்கவில்லை எனக் கூறி, அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யவோ அல்லது கொள்ளி வைக்கவோ அவரது மகன் வர மறுத்துவிட்டார். இந்திய பாரம்பரிய வழக்கப்படி தந்தை இறந்தால் மகன் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய அவர் முற்றிலுமாக மறுத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ఆస్తి లేదని తలకొరివి పెట్టని కొడుకు
ఆస్తి అంతస్తులు ఇవ్వలేదని తండ్రి శవానికి తలకొరివి పెట్టడానికి కొడుకు
చిత్తూరు జిల్లా కార్వేటినగరంలో వెలుగుచూసిన ఘటన
కూతురు నాగరత్నం తండ్రికి చివరి వీడ్కోలు పలుకుతూ అంత్య క్రియలు pic.twitter.com/oSpVUzbjDp— Telugu Feed (@Telugufeedsite) August 19, 2026
தந்தை இறந்த பிறகும் சொத்துக்காகப் பிடிவாதம் பிடித்த மகனின் செயலால் அதிர்ச்சியடைந்த, அவரது மகள் நாகரத்தினம் துணிச்சலுடன் முன்னடி எடுத்து வைத்தார். பெற்ற தந்தைக்கு இறுதி விடை கொடுக்க யாரும் இல்லாத நிலையில், மகளாகிய அவரே அனைத்து இறுதிச்சடங்குகளையும் முறைப்படி முன்னின்று நடத்தினார். மகன்களே பெற்றோரைக் கைவிடும் இந்தச் சமூகத்தில், பாசத்திற்காக மகள் நாகரத்தினம் தனது தந்தையின் சிதைக்குக் கொள்ளி வைத்து இறுதி விடை கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
