LATEST NEWS
“அன்று அதிமுகவினர் செய்த அந்த ஒரு தவறுதான்… ஆட்சியையே பறிகொடுக்க வைத்தது..!” சர்க்கார் பேனர் சர்ச்சையை சுட்டிக்காட்டி… அமைச்சர் என்.ஆனந்த் விளாசல்..!!
தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தின் போது பதிலளித்து பேசிய நகராட்சித்துறை அமைச்சர் என்.ஆனந்த், முதல்வர் விஜய் உடன் 25 ஆண்டுகளுக்கு மேலாக நெருங்கிப் பழகியவன் நான் என்று குறிப்பிட்டதோடு, சாதி, மதம் மற்றும் பணம் ஆகிய எதுவுமே நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எடுபடவில்லை என்று உரையாற்றினார்.
மேலும் பேசிய அவர், தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகம் 2 முதல் 7 சதவீதம் வரையிலான வாக்குகளைத் தான் வாங்குவார்கள் என்று பரவலாகப் பேசினார்கள் எனக் குறிப்பிட்டார். மேலும் தான் தி.நகரில் 4 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்ததாகவும், தன்னை வெற்றிபெற செய்த தியாகராய நகர் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து அதிமுக குறித்துப் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், சர்க்கார் படத்தின் பேனரை அதிமுகவினர் கிழிக்காமல் இருந்திருந்தால், அவர்கள் இன்னமும் ஆட்சியில் இருந்திருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
