LATEST NEWS
மீடியாவைப் பார்த்து ஓடுகிறேனா..? எடக்கு மடக்காகக் கேள்வி கேட்டு ட்ரோல் பண்ண நினைக்குறாங்க… எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் என்.ஆனந்த் அதிரடி பதிலடி..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் என். ஆனந்த், ‘மீடியாவைப் பார்த்து ஓடுகிறேன்’ என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தகுந்த விளக்கம் அளித்துள்ளார். எடக்கு மடக்காகக் கேள்வி கேட்டுத் தங்களை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே ஊடகங்கள் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
ஊடக நிறுவனங்களை நடத்தி வரும் எதிர்க்கட்சியினர், எங்களிடம் கேள்வி கேட்பது போல் கேட்டு ட்ரோல் செய்யும் நோக்கத்தில் இருக்கிறீர்கள் என்று அமைச்சர் சாடினார். மேலும், இதைக் கண்டு நாங்கள் ஒருபோதும் ஓடவில்லை, பயப்படவும் இல்லை என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு அவர் அவையில் நேரடியாகப் பதிலடி கொடுத்தார்.
தங்கள் முதலமைச்சரின் பாணியில், வீண் வார்த்தைகளில் ஈடுபடாமல் எதுவாக இருந்தாலும் அதைச் செயலில் சாதித்துக் காட்டுவதுதான் தங்களது உண்மையான நோக்கம் என்று அமைச்சர் என். ஆனந்த் திட்டவட்டமாகக் கூறினார்.
