“எம் தாய்மொழியை 3-வது இடத்திற்கு தள்ளுவதை சகித்துக் கொள்ள மாட்டோம்” – ஆளுநர், பாஜகவுக்கு தவெக அதிரடி எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எம் தாய்மொழியை 3-வது இடத்திற்கு தள்ளுவதை சகித்துக் கொள்ள மாட்டோம்” – ஆளுநர், பாஜகவுக்கு தவெக அதிரடி எச்சரிக்கை..!!

Published

on

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாகப் பாடப்பட்ட சம்பவத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. நமது நிலத்தில் நமது தாய்மொழிக்கே எப்போதுமே முதன்மை முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அக்கட்சி, தமிழ்த்தாய் மொழியைத் தரம் தாழ்த்திப் பின்னுக்குத் தள்ளும் இத்தகைய செயல்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்த குளறுபடிக்குக் காரணமானவர்கள் ஒன்றிய பாஜக அரசாக இருந்தாலும் சரி அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி, அவர்களைத் தவெக வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழின் பெருமையையும் உரிமையையும் நிலைநாட்டுவதற்குத் தேவைப்பட்டால் தகுந்த சட்டப் பூர்வமான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவும் தாங்கள் தயாராக இருப்பதாக அக்கட்சி எச்சரித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in