LATEST NEWS
“நெஞ்சை பதறுது.. ஆற்றில் தத்தளித்த 30 வயது பெண்.. 5 நிமிட மரணப் போராட்டம்.. சத்தம் கேட்டு ஓடிவந்த கூலி தொழிலாளி செய்த மாஸ் காரியம்… போலீசாரையே வியக்க வைத்த சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியின் படுவா காவல் எல்லைக்குட்பட்ட சாரதா கால்வாய் தாகேர்வா பாலம் அருகே, மனிதாபிமானத்திற்கு மிகச்சிறந்த உதாரணமாக சம்ஷாத் என்ற தொழிலாளி, ஆற்றில் மூழ்கிக் கொண்டிருந்த ஊர்மிளா என்ற பெண்ணைக் காப்பாற்றத் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கர்வஹியா கிராமத்தைச் சேர்ந்த சுனில் என்பவரின் 30 வயது மனைவி ஊர்மிளா, திடீரென பாலத்திலிருந்து சாரதா கால்வாய்க்குள் குதித்துள்ளார். அவர் நீரில் மூழ்கித் தவிப்பதைக் கண்ட அங்கிருந்த மக்கள் அதைக் காப்பாற்ற முயலாமல் தங்களது செல்போன்களில் வீடியோ எடுப்பதிலேயே மும்முரமாக இருந்துள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் செங்கல் ஏற்றும் கூலித் தொழிலாளியாக வேலை செய்துகொண்டிருந்த சம்ஷாத், மக்களின் சத்தத்தைக் கேட்டு ஒரு நொடி கூட யோசிக்காமல் ஆற்றில் குதித்து, சுமார் 5 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு ஊர்மிளாவை பத்திரமாக மீட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்ததுடன், அவரை ராமியாபெஹாத் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்; அங்கு அவர் தற்பொழுது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மனிதாபிமானம் என்பது எந்த ஒரு அடையாளத்தையும் சார்ந்தது அல்ல என்பதைத் தனது அசாத்திய துணிச்சலால் நிரூபித்துக் காட்டியுள்ளார் சம்ஷாத். சம்ஷாத் இதுபோன்று ஆற்றில் மூழ்கிய பிற மனிதர்களின் உயிரைக் காப்பாற்றுவது இது முதல் முறையல்ல என்றும், இதற்கு முன்பும் அவர் இதேபோல் மூன்று பெண்களின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பிறர் உயிரைக் காத்த இந்த எளிய தொழிலாளியின் வீரத்திற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
