“திமுக கூட சேர்ந்து சிஎம் ஆகணும்னு எடப்பாடி துடிச்சார்..!” குண்டைத் தூக்கிப் போட்ட இசக்கிசுப்பையா.. தமிழக அரசியலில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திமுக கூட சேர்ந்து சிஎம் ஆகணும்னு எடப்பாடி துடிச்சார்..!” குண்டைத் தூக்கிப் போட்ட இசக்கிசுப்பையா.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

Published

on

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தவெக மாவட்டச் செயலாளர் இசக்கி சுப்பையா, “எங்கள் தலைவர் விஜய்யின் ஒற்றை முகம் வந்துவிட்டுச் சென்றால் இங்கு இந்தியப் பிரதமரே வந்தாலும் தோற்றுவிடுவார்” என்று மிக ஆக்ரோஷமாக முழங்கியுள்ளார். தவெக தலைவர் விஜய்யை அனைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று கூறுவதில் தனக்கு உடன்பாடில்லை என்றும், தற்போதைய சூழலில் விஜய் இந்தியாவின் அடுத்த பிரதமராக வரக்கூடிய அனைத்து தகுதிகளும் கொண்டவர் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அசாம் மாநிலத்திற்குத் தான் சென்றிருந்தபோது அங்கிருந்த ஒரு வாகன ஓட்டுநரே “பாஜக வேஸ்ட்; தவெக தான் ஒர்த்” என்று கூறியதை மேடையில் சுட்டிக்காட்டிய அவர், தவெக-வின் மக்கள் செல்வாக்கு தற்போது எல்லைகளைத் தாண்டிப் பரவியுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

தான் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்ததற்கான அரசியல் பின்னணிகளையும், எடப்பாடி பழனிசாமியின் இரகசியக் கூட்டணி முயற்சிகளையும் இசக்கி சுப்பையா ஓப்பனாகப் போட்டுடைத்துள்ளார். எம்ஜிஆர் தோற்றுவித்த அதிமுக தற்போது ஜெயலலிதாவை அசிங்கப்படுத்தியவர்களுடனும், கொள்கைக்கு மாறாகத் திமுகவுடனும் இரகசியக் கூட்டணி வைக்க முயன்றதாலேயே, தங்களைச் சேர்ந்த 27 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு ஆதரவாக பேரவையில் வாக்களித்ததாகக் குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமி தன்னைத் தகுதி நீக்கம் செய்யப் போவதாக மிரட்டியதால், தனக்குப் பதவி ஆசை இல்லை என்பதை நிரூபிக்கத் தானாகவே பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் பொதுச்சேவை செய்யும் தவெக இயக்கத்திற்கு ஆதரவளித்துள்ளதாகக் கூறினார். அதிமுகவும் இரட்டை இலையும் தனது உயிர் மூச்சுதான் என்றாலும், தற்போதைய தலைவர்களின் சுயநலப் போக்கால் அது அழிவின் விளிம்பில் இருப்பதாகக் காரசாரமாகக் குற்றம் சாட்டினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in