“அய்யோ.. இப்பவே கண்ணைக் கட்டுதே..” அதிகாரிகள் மழையைப் பற்றிப் பேச, மேடையில் அமைச்சர் செய்த காரியம்.. இணையத்தைக் கலக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அய்யோ.. இப்பவே கண்ணைக் கட்டுதே..” அதிகாரிகள் மழையைப் பற்றிப் பேச, மேடையில் அமைச்சர் செய்த காரியம்.. இணையத்தைக் கலக்கும் வீடியோ..!!

Published

on

மதுரையில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை குறித்த மண்டல முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டத்தில், தமிழக அமைச்சர் ஆனந்த் அவர்கள் தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மேடையிலேயே தவித்த காட்சிகள் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து அரசு அதிகாரிகள் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்த வேளையில், மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் பயங்கர சோர்வுடன் காணப்பட்டார். “இப்பவே கண்ணைக் கட்டுதே..” என்கிற ரேஞ்சுக்கு, அவசர ஆலோசனைக் கூட்டம் என்றுகூடப் பாராமல் அவர் மேடையிலேயே கண்ணயரத் தொடங்கினார்.

கூட்டத்தில் அதிகாரிகள் அறிக்கைகளை வாசித்துக் கொண்டிருந்தபோது, அமைச்சர் ஆனந்த் தூக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் தலையசைத்தபடி தூங்கிய காட்சிகள் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தன. அருகில் இருந்தவர்கள் கவனிப்பதை உணர்ந்து சில முறை திடுக்கிட்டு விழித்த போதிலும், சோர்வின் காரணமாக அவரால் தூக்கத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. பருவமழை முன்னெச்சரிக்கை போன்ற மிக முக்கியமான மற்றும் பொறுப்பான ஒரு கூட்டத்தில், மக்களின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படும் நேரத்தில் அமைச்சரின் இந்தத் தூக்கக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in