“கட்சிக்கு நான்தான் அப்பன்” விருப்பமிருந்தால் இரு இல்லனா போன்னு சொல்றாரு.. அது ஒரு கட்சியா..? மு.களஞ்சியம் காட்டம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கட்சிக்கு நான்தான் அப்பன்” விருப்பமிருந்தால் இரு இல்லனா போன்னு சொல்றாரு.. அது ஒரு கட்சியா..? மு.களஞ்சியம் காட்டம்..!!

Published

on

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளர் மு.களஞ்சியம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியிலிருந்து விலகியுள்ளார். தொடர் தேர்தல் தோல்விகள் குறித்து கட்சியில் எவ்வித ஆய்வுக் கூட்டங்களும் நடத்தப்படுவதில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். “கட்சிக்கு நான்தான் அப்பன், விருப்பமிருந்தால் இரு” என்ற சர்வாதிகாரப் போக்கிலேயே சீமான் செயல்படுவதாகவும், அங்கு அவர் வைப்பதுதான் சட்டம் என்றும் களஞ்சியம் விமர்சித்துள்ளார்.

மேலும், நாம் தமிழர் கட்சி என்பது ஒரு முறையான அரசியல் கட்சியே அல்ல, அது ஒரு கும்பல் என்று அவர் சாடியுள்ளார். சீமானின் இத்தகைய செயல்பாடுகளுடனும், தனிமனித வழிபாட்டு முறையுடனும் இனி முரண்பட்டுப் பயணிக்க முடியாது என்பதாலேயே தான் கட்சியிலிருந்து முற்றிலும் வெளியேறிவிட்டதாக மு.களஞ்சியம் தெரிவித்துள்ளார். இவரின் இந்த அதிரடி விலகலும் குற்றச்சாட்டுகளும் தமிழக அரசியல் வட்டாரத்திலும், நாம் தமிழர் கட்சிக்குள்ளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in