LATEST NEWS
ஆத்தாடி..! வங்கிக்குள்ளேயே அரங்கேறிய பகீர் துணிகரம்… உதவி செய்வது போல் நடித்து.. இளம்பெண்ணிடம் ₹1.25 லட்சத்தை ஆட்டைய போட்ட முதியவர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் ஏமாற்றுக்காரர்கள் எல்லா இடங்களிலும் உலாவி வரும் நிலையில், நாம் எச்சரிக்கையாக இருப்பது மட்டுமே நமது பணத்தைப் பாதுகாப்பதற்கான ஒரே வழியாகும். ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தின் சபிடோன் பகுதியில் உள்ள எஸ்பிஐ (SBI) வங்கிக் கிளையில், இளம்பெண் ஒருவர் தனது கணக்கில் ₹1.25 லட்சம் ரொக்கப் பணத்தைச் செலுத்துவதற்காக வந்துள்ளார்.
அப்போது, அங்குள்ள கவுண்டரில் ஏற்கனவே நின்றுகொண்டிருந்த ஒரு நபர், அந்தப் பெண்ணுக்கு உதவுவது போல நடித்துள்ளார். அவர் அந்தப் பெண்ணின் பணம் செலுத்தும் படிவத்தில் (Deposit Form) இருந்த கணக்கு எண்ணை வஞ்சகமாக மாற்றியுள்ளார். பின்னர் கணக்கு எண் தவறாக இருப்பதாகக் கூறி, அந்தப் பெண்ணை மற்றொரு புதிய படிவத்தைப் பூர்த்தி செய்யுமாறு கூறியுள்ளார்.
அந்த இளம்பெண் புதிய படிவத்தை நிரப்பிக் கொண்டிருந்த இடைவெளியில், அந்த மர்ம நபர் அவரிடமிருந்த ₹1.25 லட்சம் பணம் மற்றும் வங்கிப் புத்தகத்தை நைசாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். பின்னர் வங்கிப் புத்தகத்தை மட்டும் அவரிடம் திருப்பித் தந்துவிட்டு, அந்த ₹1.25 லட்சம் பணத்துடன் வங்கியிலிருந்து நழுவியுள்ளார். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த நபர் எஸ்பிஐ வங்கியிலிருந்து வெளியேறி, எதிரே உள்ள பிஎன்பி வங்கிக் கிளையை நோக்கிச் செல்வது பதிவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து தற்பொழுது போலீஸாரில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
