LATEST NEWS
ச்சீ அருவருப்பு..! “லிப்ட்டுக்குள் ஒரே நாத்தம் அடிக்குது” பால்காரர் செய்த அசிங்கம்… திறந்து பார்த்தபோது குடியிருப்புவாசிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் பிவாடியில் உள்ள ‘கிருஷ் வாடிகா’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு சொசைட்டியில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது . அந்த சொசைட்டியின் லிஃப்ட் அடிக்கடி பழுதடைந்ததாலும், அதிலிருந்து துர்நாற்றம் வீசியதாலும் சந்தேகமடைந்த அங்கிருந்தவர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர் . அப்போது, அங்கு தினமும் பால் விநியோகம் செய்ய வரும் அஜருதீன் என்ற இளைஞர், லிஃப்டிற்குள் சிறுநீர் கழிக்கும் அநாகரீகமான செயல் கேமராவில் பதிவாகியிருந்தது தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
இந்தக் கொடூரமான விஷயம் தெரிந்ததும் ஆத்திரமடைந்த குடியிருப்பாளர்கள் அந்தப் பால் வியாபாரியைப் பிடித்துக் கடுமையான விசாரணை நடத்தினர் . அப்போது அவர், வீடுகளுக்கு விநியோகிக்கும் பாத்திரங்களில் பாலை ஊற்றுவதற்கு முன்பாக, லிஃப்டிற்குள் வைத்து பாலில் தனது சிறுநீரைக் கலந்து விநியோகம் செய்ததாகவும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது . இச்சம்பவம் தொடர்பாகச் சொசைட்டி நிர்வாகிகள் காவல்துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீஸார் அந்த இளைஞரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
