கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்துறீங்களா என்ன..? ஒரு மாலை கூட வாங்கி வைக்க மாட்டீங்களா..? அரசு அதிகாரிகளிடம் சண்டையிட்ட திமுக MLA..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்துறீங்களா என்ன..? ஒரு மாலை கூட வாங்கி வைக்க மாட்டீங்களா..? அரசு அதிகாரிகளிடம் சண்டையிட்ட திமுக MLA..!!

Published

on

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அரசு விழா நடைபெற்றது. இந்த அரசு விழாவில் பங்கேற்பதற்காகத் திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் வருகை தந்தார்.

அப்போது விழா ஏற்பாடுகளைக் கவனித்த அரசு அதிகாரிகள், அரசுச் சார்பில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு மட்டுமே காந்தி சிலைக்கு அணிவிப்பதற்கான மாலைகள் வைக்கப்பட்டுள்ளன என்ற விவரத்தைத் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த திமுக எம்.எல்.ஏ விக்னேஷ் கண்ணன், விழாப் பந்தலிலேயே அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Advertisement

அதிகாரிகளை நோக்கித் தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்திய விக்னேஷ் கண்ணன், “ஒரு மாலை கூட வாங்கி வைக்க மாட்டீங்களா? கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்துறீங்களா என்ன?” என்று ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பினார். அரசு விழாவில் மக்கள் பிரதிநிதியான தமக்கு மாலை ஒதுக்கப்படாததைக் கண்டித்து அவர் எழுப்பிய இந்தக் கேள்வியும், அதிகாரிகளுடனான வாக்குவாத வீடியோவும் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in