அய்யோ கொடுமை..! “விலங்கு என நினைத்து” நண்பனைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொடூரம்.. வேட்டையாட சென்ற இடத்தில் நடந்த பயங்கர சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ கொடுமை..! “விலங்கு என நினைத்து” நண்பனைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொடூரம்.. வேட்டையாட சென்ற இடத்தில் நடந்த பயங்கர சம்பவம்..!!

Published

on

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா கெரேமக்கி கிராமத்தைச் சேர்ந்த 7 நண்பர்கள், நாட்டுத் துப்பாக்கிகளுடன் அருகில் உள்ள வனப்பகுதிக்கு வேட்டையாடச் சென்றுள்ளனர். அடர்ந்த காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது, புதர்களுக்கு இடையே ஏதோ நகர்வதைக் கண்டு, அது வனவிலங்கு எனத் தவறாக நினைத்துத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

ஆனால், எதிர்பாராதவிதமாக அவர்கள் சுட்ட குண்டு, அவர்களுடன் வேட்டைக்கு வந்த சேத்தன் (26) என்ற வாலிபர் மீது பாய்ந்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற 6 நண்பர்களும் அங்கிருந்து தப்பி ஓடித் தலைமறைவாகினர்.

Advertisement

தகவலறிந்து வந்த கொப்பா போலீஸார் சேத்தனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி தலைமறைவாக இருந்த 3 நண்பர்களைக் கைது செய்தனர். இச்சம்பவம் உண்மையில் தவறுதலாக நடந்ததா அல்லது முன்விரோதம் காரணமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையா என்ற கோணத்திலும், வேட்டைக்கு ஆவணமற்ற நாட்டுத்துப்பாக்கி எப்படி கிடைத்தது என்ற கோணத்திலும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in