LATEST NEWS
என்ன கொடுமை இது.. லைக்ஸ்காக இப்படியுமா பண்ணுவாங்க..? நின்றுகொண்டிருந்த ரயிலில் சேலையை கட்டி பெண் செய்த அலப்பறை.. வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நோக்கத்திற்காக, பெண் ஒருவர் தனது சேலை முந்தானையை நின்றுகொண்டிருந்த ரயில் இன்ஜினுடன் கட்டி, தண்டவாளத்தில் நடனமாடி ரீல்ஸ் வீடியோ பதிவு செய்த சம்பவம் இணையவாசிகளிடையே கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் சினிமா பாணியில் காட்சியமைக்க முயன்ற அந்த பெண், சேலை மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து, பாடலுக்கு ஏற்ப உதடசைத்து பல்வேறு முகபாவனைகளுடன் தண்டவாளத்தில் நடனமாடியது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
சோஷியல் மீடியாவில் சில லைக்ஸ்களுக்காகவும் பார்வைகளுக்காகவும் மக்கள் தங்களின் பொறுப்புணர்வை இழந்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதாக இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்த பயனர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். நின்றுகொண்டிருக்கும் ரயிலாக இருந்தாலும், தண்டவாளங்கள் எப்போதுமே ஆபத்து நிறைந்த பகுதி என்றும், அங்கு ரீல்ஸ் எடுப்பது மிகவும் கவனக்குறைவான செயல் என்றும் நெட்டிசன்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த ஆபத்தான வீடியோ வைரலானதை தொடர்ந்து, வீடியோவில் உள்ள இடம் மற்றும் நபரை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே சேவை மையத்தை டேக் செய்து பலரும் இணையத்தில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
