LATEST NEWS
FLASH: நாதகவில் இருந்து விலகினார் களஞ்சியம்… அதிர்ச்சியில் சீமான்…!!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிக நெருக்கமானவராகக் கருதப்பட்ட திரைப்பட இயக்குநர் களஞ்சியம், கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். சீமானுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தங்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளுடன் தொடர்ந்து பயணிப்பது ஆரோக்கியமானதாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கட்சியில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் தனக்கு உடன்பாடற்ற சூழலை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் மாற்று அரசியல் தலைவர்கள் மீது வைக்கப்படும் கடுமையான விமர்சனங்கள் தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக இயக்குநர் களஞ்சியம் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய விமர்சனப் போக்கு, நாம் தமிழர் கட்சி முன்னெடுத்து வரும் தமிழ்த் தேசியப் பண்பாட்டிற்குச் சற்றும் உகந்தது அல்ல என்றும் அவர் தனது கடிதத்தில் கவலை தெரிவித்துள்ளார். சீமானின் வலதுகரமாகத் திகழ்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரின் இந்த திடீர் விலகல் நாதக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
