“அப்பாவுக்கு கோபம் அதிகம்.. அதனால் தான்…” 10 துப்பாக்கி குண்டுகளுடன்.. சிறையில் பிடிபட்ட மைனர் பெண் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அப்பாவுக்கு கோபம் அதிகம்.. அதனால் தான்…” 10 துப்பாக்கி குண்டுகளுடன்.. சிறையில் பிடிபட்ட மைனர் பெண் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்..!!

Published

on

உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் உள்ள சிறையில் வாலிபர் ஒருவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஒரு நபரின் துணையோடு மைனர் பெண் ஒருவர் சந்திக்க சென்றுள்ளார். அப்போது, போலி அடையாள அட்டையை சிறைச்சாலை நுழைவாயில் உள்ள அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.

அப்போது, கட்டாய சோதனை என்ற அடிப்படையில் அந்த சிறுமியிடம் சோதனை நடத்தியுள்ளனர். அப்போதுதான் அவர் போலி அடையாள அட்டையுடன் வந்ததுடன், பாக்கெட்டில் 10 துப்பாக்கி குண்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement

இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, என்னுடைய காதலரை சந்திக்க வந்தது என்னுடைய அப்பாவுக்கு தெரியாது. தனது தந்தைக்கு கோபம் அதிகம். சிறையில் உள்ள தன் காதலனை சந்திக்கச் சென்றது தெரிந்தால் அவர் தீவிரமான அல்லது கடுமையான நடவடிக்கையை எடுப்பார். அதனால்தான் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை எடுத்து வந்ததாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அந்த மைனர் பெண்ணை சிறைத்துறை அதிகாரிகள் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த பெண்ணின் தந்தை லைசென்ஸ் துப்பாக்கி வைத்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in